முருகனின் கோரிக்கை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகனின் கோரிக்கை மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீஹரன் என்னும் முருகன் 26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முருகனின் அறையில் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து முருகனை பார்வையாளர்கள் சந்தித்து பேச மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டது.இதற்கிடையே இலங்கையில் இருந்து வந்த முருகனின் தாயார் சோமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் மே 29ம் திகதி தாயார் இலங்கை செல்லவுள்ள நிலையில், அவரை சந்திக்க அனுமதி வழங்குமாறு முருகன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு மற்றும் முருகன் தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி, கோடை விடுமுறைக்கு பின்பு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags: