எட்டு கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்த ஹீரோயின்!

பாகுபலி படம் இந்திய அளவில் பிரபாஸுக்கு பெயர் பெற்றுத்தந்திருக்கிறது. அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் ‘சாஹு’ புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா, ராஷ்மிகா மன்டன்னா போன்ற நடிகைகளை நடிக்க வைக்க முதலில் ஆலோசிக்கப்பட்டது. இந்தியிலும் பாகுபலி வசூலை அள்ளியதால் சாஹு படத்தில் பாலிவுட் ஹீரோயின்கள் நடித்தால் வர்த்தக ரீதியில் படத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று பட தயாரிப்பாளர்கள் எண்ணினர்.

ஆனால் பாலிவுட் ஹீரோயின்கள் கணக்கு வேறுவிதமாக உள்ளது. பிரபலமாக இருக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க சில நடிகைகள் ஆர்வம் காட்டவில்லை. சில ஹீரோயின்கள் கால்ஷீட் தர தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களை திணறடிக்கிறதாம். ஷரத்தா கபூர் இந்தியில் இன்னும் ஹிட் படங்கள் தராமல் அதற்காக போராடிக்கொண்டிருக்கிறார். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது ரூ. 8 கோடிக்கான காசோலையை கொடுத்தால்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார். திஷா படானி ரூ 5 கோடி கேட்கிறாராம். பூஜா ஹெக்டே, கிரித்தி சனான் ஆகியோர் கையை கடிக்காத அளவுக்கு சம்பளம் பேசுவதால் அவர்கள் பெயரும் ஹீரோயின் பட்டியலில் இருக்கிறதாம்.

Tags: