பிரான்சில் பயங்கரம்: தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்தோர் மீது ஏறிய ரயில் – மூவர் பலி!

பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்தோர் ரயில் அடிப்பட்டு மரணமடைந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பிரான்சில் Saint-Jean-de-Luz அருகே அதிகாலை 5 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸ் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, Saint-Jean-de-Luz அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 4 புலம் பெயர்ந்தோர் மீது Bordeaux-க்கு பயணித்த ரயில் மோதியது.
இதில், 3 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துவிட்டனர், மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
அவர்கள் ஏன் தண்டவாளத்தில் படுத்துகிடந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை என பொலிஸ் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

ரயிலில் அடிபட்டவர்களில் இருவர் அல்ஜீரியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது, மற்றவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஸ்பெயின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதி புலம்பெயர்ந்தோருக்கான பாதையாக இருக்கிறது என Ciboure-ன் மேயர் Eneko Aldana-Douat கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!