காரைநகரில் குழந்தைகள் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா!

யாழ். காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்ப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 18 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாய் (வயது-37) மற்றும் பெண் குழந்தை (வயது-05), ஆண் குழந்தை (வயது-09) என மூவருக்கும், தந்தை (வயது-37) மற்றும் ஆண் குழந்தை (வயது-6), பெண் குழந்தை (வயது-8) என மூவருக்கும், தந்தை (வயது-51), தாய் (வயது-52), 19, 29 வயதுடைய ஆண் குழந்தைகள் இருவர் என நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவருடன் 10 பேர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!