நோர்வே நாட்டில் பயங்கரம்: வில் அம்பை பயன்படுத்தி அப்பாவி மக்களை கொடூரமாக கொன்ற மர்ம நபர்!

ஐரோப்பிய நாடான நோர்வேவில் வில் அம்பை பயன்படுத்தி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. நோர்வேயின் தலைநகரான Oslo-வில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள Kongsberg நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி திடீரென்று அப்பகுதி வழியே சென்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பலர் உயிரிழந்துள்ளனர்.

சிலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி, Oyvind Aas, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துவிட்டதாக கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து கேட்ட போது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு மக்கள் கூடியிருக்கும் Kongsberg நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த மக்கள் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்கும் ஓடியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.

நீதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் Monica Maeland, இந்த தாக்குதல் குறித்த விவரங்களை கேட்டுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் Erna Solberg, தாக்குதல் குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான செயலை செய்த அந்த நபர் கைது செய்யப்பட்டு, Drammen-ல் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் காயமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட Silje Alisø என்பவர், இது நிச்சயமாக ஒரு மோசமான சம்பவம், ஆனால் எங்கள் ஊழியர்கள் யாரும் அதிர்ஷ்டவசமாக உடல் ரீதியாக காயமடையவில்லை என்று கூறியுள்ளார்.

நாட்டின் மேயர் இது ஒரு கொடூரமான சம்பவம், சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. நம்மால் முடிந்தவரை மக்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறியுள்ளார்.

வீடுகள், கடைகள் மற்றும் பல்கலைக் கழக வளாகம் கொண்ட பகுதியிலும், இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!