நாட்டையே அதிரவைத்த கொலை வழக்கில் வெளியான பரபரப்பு தீர்ப்பு!

கேரளாவில் மனைவி உத்ராவை பாம்பை வைத்து கொலை செய்த வழக்கில் கணவன் சூரஜுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). இவர் கடந்தாண்டு மே 6ஆம் திகதி வீட்டு கட்டிலில் படுத்திருந்த போது விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.

முதலில் சாதாரண பாம்பு கடி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொலை வழக்காக மாறியது. அதன்படி சூரஜ் தான் மனைவியை பாம்பை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

உத்ராவை கொன்றுவிட்டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பாம்பை வாடகைக்கு வாங்கி கடிக்க வைத்தார். இதை தொடர்ந்து சூரஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் சூரஜ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதோடு ரூ 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனிடையில் சூரஜுக்கு இந்த தண்டனை பத்தாது எனவும், மரண தண்டனை கோரி மேல்முறையீடு செய்வோம் எனவும் உத்ராவின் பெற்றோர் ஆக்ரோஷமாக கூறியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!