8 பெண்களை கொன்றுவிட்டு போலீசாருக்கு கடிதம் அனுப்பிய கனேடியர்: சினிமாவை மிஞ்சும் திகில் சம்பவம்!

அமெரிக்க நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக எட்டு பெண்கள் கொல்லப்பட்ட நிலையில், ஒவ்வொரு கொலைக்கும் பின், தான்தான் அவர்களைக் கொன்றதாக பொலிசாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒரு நபர் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார். அந்த கடிதங்களில் கையெழுத்து இடவேண்டிய இடத்தில் சிரிக்கும் முகம் ஒன்று வரையப்பட்டிருந்ததால், அந்த மர்ம நபர் ’சிரிக்கும் முக கொலையாளி’ என அழைக்கப்பட்டார்.

1995ஆம் ஆண்டு Julia Ann Winningham என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அவரது காதலரான Keith Jesperson (66) என்பவர் கைது செய்யப்பட்டார்.
M. William Phelps என்ற ஊடகவியலாளர் Jespersonஇன் நண்பராக நடித்து அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். அவரிடம் Jesperson தான் செய்த கொலைகளைக் குறித்து விவரமாக கூறியிருக்கிறார்.

அதன் பிறகுதான், இந்த Jespersonதான் அந்த ’சிரிக்கும் முக கொலையாளி’ என்பது தெரியவந்துள்ளது.
சிறு வயதில் Jespersonஇன் தந்தை அவரை பெல்ட்டால் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு சாடிஸ்ட் போல மகனை அடிப்பதில் அவர் இன்பம் காண, பிந்நாட்களில் அவரது மகன், பெண்களை கொலை செய்வதில் இன்பம் கண்டிருக்கிறார்.

திருமணமாகி புது வாழ்க்கை தொடங்கி விட்டது என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், Jespersonஇன் மனைவியான Rose Huck, அவருடனான தாம்பத்திய உறவைத் தவிர்க்கத் தொடங்கியதுடன், அவரை அவமானப்படுத்தும் வகையில் பாலியல் உறவுக்காக அவர் அலைவதாக மோசமாக திட்டியிருக்கிறார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவேறு Rose சந்தேகிக்க, இருவருக்கும் இடையிலான திருமணம் முடிவுக்கு வந்துள்ளது.

விவாகரத்து ஆனதால் Jesperson பெண்கள் மீது கடும் கோபத்திலிருந்த நிலையில், Taunja Bennett (23) என்ற பெண்ணுடைய நட்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அவரும் Roseஐப் போலவே பாலியல் உறவுக்காக Jesperson அலைவதாக விமர்சிக்க, ஆத்திரமடைந்த Jespersonக்கு தன் மனைவியின் முகம்தான் ஞாபகம் வந்திருக்கிறது. ஆகவே, Taunjaவை அடித்து உதைத்து கழுத்தை நெறித்துக் கொன்று, கைரேகை எதுவும் தெரியாதவகையில் அவரது உடையின் பொத்தான்களைக் கூட அகற்றிவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

இதற்கிடையில், Taunjaவின் கொலையை வேறொரு தம்பதியர் ஒத்துக்கொண்டு சிறை செல்ல, Jespersonக்கு தைரியம் வந்து விட்டது. தொடர்ந்து பல பெண்களை, குறிப்பாக தனியாக வாழும் பெண்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகளை வன்புணர்ந்து கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாத வகையில் உடலை சிதைத்து வீசிவிட்டு சென்றிருக்கிறார் Jesperson.

தான் கிட்டத்தட்ட 166 பெண்களைக் கொலை செய்துள்ளதாக Jesperson கூறினாலும், எட்டு பெண்களுடனான அவரது தொடர்பை மட்டுமே பொலிசாரால் நிரூபிக்க முடிந்துள்ளது.
தான் செய்த கொடூர கொலைகளைக் குறித்து ஊடகவியலாளர் Williamஇடம் கூறும்போது கூட, சிரித்த முகத்துடன் கதை சொல்வதுபோல விவரிப்பாராம் Jesperson.

அந்த பெண்கள் பாவம், அவர்கள் படும் துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகத்தான் அவர்களை கொலை செய்தேன் என்பது போலவே பேசுவாராம் அவர்.

Jespersonதான் ’சிரிக்கும் முக கொலையாளி’ என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்படுள்ளன.

இதற்கிடையில், இப்போதும் Jesperson ஊடகவியலாளர் William தன் நண்பர் என எண்ணிக்கொண்டிருக்க, போதுமடா சாமி, இனி அவரிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டார் William!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!