கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு நாளை முதல் COVID தடுப்பூசி

கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு நாளை முதல் COVID தடுப்பூசி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய மாவட்ட மாணவர்ளுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்கள் பிரதேச சுகாதார மத்திய நிலையங்களூடாக அறிவிக்கப்படவுள்ளது.

இதனிடையே பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி முழுஐமயாக வழங்கப்பட்டதன் பின்னர் மூன்றாவதாக பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் 6 மாதங்களில் இவ்வாறு பூஸ்டர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன் குறிப்பிட்டுள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!