சிறந்த காதல்: முதல் காதலா? இரண்டாவது காதலா?

முதல் காதல் தோல்வி என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தாலும், அதில் இருந்து நிறைய அனுபவமான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பதால் முதல் காதலை விட இரண்டாவது காதல் சிறந்ததாக இருக்கும்.

முதல் காதலை விட இரண்டாவது காதல் சிறந்தது ஏன்?

அனுபவ அறிவு என்பது ஒரு சின்ன விடயம் அல்லது பெரிய விடயமாக கூட இருக்கலாம் அது முதல் காதல் அனுபவத்தில் இருந்து தான் கிடைக்கிறது. இதனால் மீண்டும் அதே தவறு நடக்க வாய்ப்புகள் குறைவு.

முதல் காதல் பள்ளியிலும், இரண்டாவது காதல் கல்லூரியிலும் வந்திருந்தால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் உங்களின் மாற்றத்தை உணர முடியும். இதனால் உங்களுக்கு குடும்பம், சூழ்நிலை, எது சரி, தவறு என்று பல விடயங்களை புரிந்துக் கொள்ள முடியும்.

உங்களது முதல் காதலில் சின்ன விடயங்கள், சின்ன பிரச்சனைகள் கூட மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி பிரிவுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இரண்டாவது காதலின் போது, நீங்கள் சின்ன விடயங்களுக்காக உறவு பிரிந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்க முடியும்.

முதிர்ச்சியடைந்த காதல், நமது மூளை வளர்ச்சியை குறிக்கும். இது 20 வயதிற்கு மேல் தொடர்ந்து அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது. எனவே இது உறவு விடயத்தில் பெரும்பங்கு வகிப்பதால், தெளிவான முடிவெடுக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முதல் காதலில் யோசிக்காமல் செய்யும் சில காரியங்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்திருக்க முடியும். குழந்தை பருவத்தில் ஏற்பட்ட காதலை விட தற்போது உள்ள காதலின் எதார்த்தத்தை எளிதாக புரிந்துக் கொள்ள முடியும்.

பேச்சுத்திறமை உள்ள உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது ஒரு முக்கிய காரணமாகும். இந்த பிரச்சனை முதல் காதலில் இருந்திருக்கும். அதுவே இரண்டாம் காதலில் பகிர்ந்துக் கொள்ளும் திறமை மேம்பட்டிருப்பதுடன், அதிக நேரம் பேசுவதை விட என்ன பேசுகிறோம் என்பதை உணர முடியும்.

நேர்மை குணமானது முதல் காதலை விட இரண்டாம் காதலில் அதிகமாக காணப்படும். அதுபோல நீங்களும் உங்கள் துணையிடம் நேர்மையை எதிர்பார்ப்பீர்கள். அந்த நேர்மை இரண்டாம் காதலில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதை உணர முடியும்.

பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதல் காதலில், உடனடியாக உங்கள் துணையின் மேசேஜ்களுக்கு ரிப்ளை செய்வது தான் கடமை என்று நினைத்து கொள்வது, இரண்டாம் காதலில் சில குறுகிய கால திட்டங்களாக மாறும்.

Tags: