உள்நாட்டு பால் மாக்களின் விலைகளும் அதிகரிப்பு!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாக்களில் விலைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் ஹைலண்ட் பால்மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 225 ரூவாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 400 கிராம் ஹைலண்ட் பால்மா 470 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், ஒரு கிலோ கிராம் ஹைலண்ட் பால்மா ஆயிரத்து 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!