அமெரிக்க கடற்படையிடம் 59 இலங்கை தமிழர்களுடன் சிக்கிய கேரள படகு

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான படகு ஒன்று இலங்கைத் தமிழர்களை கனடாவுக்கு கடத்த முயன்றபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது. இந்தியப் பெருங்கடலில், மாலத்தீவுகளுக்கும் மொரீஷியஸ் தீவுக்கும் இடையில், அந்தப் படகை அமெரிக்க கப்பற்படை வழிமறித்துள்ளது. அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளார்கள்.

அவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு கடத்தப்படுவது தெரியவந்ததையடுத்து அமெரிக்க கடற்படை அந்த படகை மறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க, அவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

விசாரணையில், அந்த 59 பேரும், தமிழ்நாட்டிலுள்ள மதுரை மற்றும் திருச்சியிலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து தப்பியவர்கள் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த படகு, கேரளாவிலுள்ள கொல்லம் என்ற இடத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணுக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!