சென்னையில் தந்தை கண்முன்னே பலியான பிள்ளைகள்!

death man

சென்னையில் அலமாதி ஏரி சேற்றில் சிக்கி தந்தை கண்முன்னே அண்ணன், தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவர் செங்குன்றம் அருகே பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.இவருக்கு சதீஷ்(11) என்ற மகனும், பிரியா லட்சுமி(7) என்ற மகளும் உள்ளனர்.

பள்ளி விடுமுறை என்பதால் இருவரையும் கடைக்கு அழைத்து வந்துள்ளார், நேற்று மாலை இருவரும் அலமாதி ஏரி அருகே சென்றுள்ளனர்.நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு வராததால், கிருஷ்ணமூர்த்தி பார்க்க சென்றுள்ளார்.அங்கே சேற்றில் சிக்கிக் கொண்ட இரு பிள்ளைகளும், கதறித் துடித்துள்ளனர்.உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வர, பிள்ளைகளை மீட்ட கிருஷ்ணமூர்த்தி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.பிள்ளைகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: