இரவில் 5 நிமிடங்களுக்கு உங்களால் அசைய முடியவில்லையா? காரணம் இதுதான்

இரவில் தூங்கிகொண்டிருக்கும்போது சில நேங்களில் நமது கண்கள் விழித்துக்கொள்ளும், நம்முடைய உடலை மறுபக்கம் திருப்ப முடியாமல் சிரமப்படும் நிலைக்கு ஆளாவோம்.

இதற்கு REM (Rapid eye movement sleep) antonia என்று பெயர். அதாவது இரவில் கண்கள் விழித்துக்கொண்டாலும் உடல்கள் இயங்காது. சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த பிரச்சனை நீடிக்கும்.

காரணம்

சிலர் இரவு நேரங்களில் திகில் நிறைந்த படங்கள் மற்றும் புத்தகங்களை படித்துவிட்டு தூங்க செல்வார்கள்.

அதே சிந்தனையோடு படுப்பதால் இரவில் திடீரென்று விழித்துக்கொள்ளும்போது, அந்த படத்தின் நினைவலைகள் நம் கண்முன்னே ஒடிக்கொண்டிருக்கும், அப்போது மூளை மட்டுமே செயல்படுமே தவிர நமது உடல் இயங்காது.

சுமார், 5 நிமிடங்கள் கழித்து இயல்பு நிலைக்கு மீண்டு வருவோம்.

மேலும் ஒரு சிலர் மன அழுத்தம் மற்றும் மன ரீதியான பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள்.

இவர்களும் இரவில் விழித்துக்கொள்ளும்போது, கண்கள் மட்டும் அந்த அறையின் நாலா பக்கமும் சுழலுமே தவிர, உடல்களை சில நிமிடங்களுக்கு அவர்களால் திருப்ப இயலாது என ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.