ரேன்சம்வேரை தொடர்ந்து வருகிறது மற்றொரு வைரஸ்: எச்சரிக்கை தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ரேன்சம்வேர் வைரசை தொடர்ந்து மற்றொரு புதிய வைரஸ் கணனிகளை தாக்கிக் கொண்டிருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.

சீன தேசிய கணனி வைரஸ் அவசர உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேன்சம்வேர் வைரசை தொடர்ந்து யுஐடபிள்யு.ஐ.எக்ஸ் என்னும் புதிய வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் மென்பொருள் கொண்ட சிஸ்டம்களில் ஊடுருவும் இந்த வைரஸ் அவற்றை முடக்கும் தன்மை கொண்டது, கணனியின் சேமிப்பகத்தையும் முடக்கும் அபாயம் உள்ளது.

எனவே விண்டோஸ் பயன்படுத்தும் நபர்கள் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பதிப்பை பயன்படுத்த தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ரேன்சம்வேர் வைரசை காட்டிலும் பத்து மடங்கு சக்தி வாய்ந்தது என டென்மார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ,