6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன!

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து கட்டார் நோக்கி அனுப்பிவைக்கப்பட்ட தடுப்பூசிகள் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை 2.15 அளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

இதன்படி அமெரிக்காவில் இருந்து 6 லட்சத்து எண்ணாயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தினால் கோரப்பட்டிருந்த 5 மில்லியன் தடுப்புசிகளில் இதுவரை 1 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் ஏனைய 4 மில்லியன் தடுப்பூசிகளின் முதற்தொகுதி எதிர்வரும்’ நவம்பர் மாத இறுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எனவும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தினுஷ தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் அமெரிக்காவிடம் மேலும் 14 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்

இவ்வாறு கோரப்பட்டுள்ள தடுப்பூசிகள் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கிடைக்கப்பெறும் எனவும் அரச மருந்தக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!