பிரித்தானிய எம்.பி-யை கொன்றது இவர்தான்: வெளியான முழு விபரம்!

பிரித்தானியா எம்.பி-யை கத்தியால் குத்திக்கொன்ற நபர் சோமாலியா பிரதமரின் முன்னாள் ஆலோசகர் மகன் என தெரியவந்துள்ளது. பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    
தாக்குதல்தாரியை கைது செய்து காவலில் எடுத்த பொலிசார், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று எம்.பி. சர் டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொன்றவர் லண்டனில் வசிக்கும் 25 வயதான Ali Harbi Ali என குற்றவாளியின் பெயர் வெளியிடப்பட்டது.

சோமாலியா வம்சாவளியை சேர்ந்த அந்த Ali Harbi Ali இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

மேலும், சர் டேவிட் அமெஸ் எம்.பியை கொல்ல Ali ஒரு வாரத்திற்கு மேலாக திட்டமிட்டு வந்ததும், லண்டனில் வசித்து வரும் Ali, தனியாளாக ரயில் மூலம் Essex வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லண்டனில் உள்ள Ali வீட்டில் பொலிசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, Ali Harbi Ali, சோமாலியா பிரதமரின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் Harbi Ali Kullane-வின் மகன் என தெரியவந்துள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தனது மகன் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதை உறுதிப்படுத்திய Harbi Ali Kullane, Ali Harbi Ali கைது செய்யப்பட்டிருப்பதை கேட்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்.

நான் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காத அல்லது கனவிலும் நினைத்திடாத ஒன்று என Harbi Ali Kullane வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!