“நியாமான அளவில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” – இந்தியா வலியுறுத்தல்!

உலக அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை அதிகம் பயன்படுத்தும் 3-வது மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையேற்றமே காரணமாக இருப்பதால் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் இந்தியா இது குறித்து தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம், கொரோனாவுக்கு பிறகு உலகம் காணும் புதிய பொருளாதார மீட்சியை பாதிக்கும் என இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

எனவே நியாமான அளவில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் சவுதி அரேபியா மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிடம் (ஓபிஇசி) இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘எண்ணெய் விலைகள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது அவை மிக அதிகமாக உள்ளன. ஏனெனில் உற்பத்தியை விட தேவை அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா மற்றும் ஓபிஇசியிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது’’ என கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!