எகிப்தில் கடும் வயிற்று வலியால் வைத்தியசாலை விரைந்த நபர்: சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

எகிப்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபரை, மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, அவர் சொன்ன தகவலைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எகிப்து நாட்டின் Aswan நகரை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த ஆறு மாதங்களாக சாப்பிட்டது எதுவும் சரியாக ஜீரணம் ஆகாமலும், உடலுக்குள் சரியாக செல்லாமலும் இருந்து வந்துள்ளது.

    
இதனால் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் உடனடியாக Aswan நகரில் உள்ள Aswan University மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு தனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக கூறியதால், மருத்துவர்கள் வயிற்று மற்றும் குடல் பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, மொபைல் போன் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அவரிடம் இது குறித்து கேட்ட போது, 6 மாதத்திற்கு முன்பு செல்போனை விழுங்கியதாகவும், அது எப்படியும் காலப்போக்கில்(கழிப்பறைக்கு சென்றால்) சரியாகிவிடும் என்று நம்பியதாக கூறியுள்ளார்.

ஆனால் அதை எதற்காக விழுங்கினார் என்பது குறித்து சொல்லவில்லை. இது இப்படியே விட்டால் ஆபத்தாகிவிடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து Aswan University மருத்துவமனைகளின் இயக்குநர் குழுவின் தலைவர் Mohamed El-Dahshoury கூறுகையில், ஒரு நோயாளி முழு தொலைப்பேசி விழுங்கியிருப்பதை, தான் தற்போது தான் முதல் முறையாக பார்ப்பதாகவும், அவரின் உடல் நிலை குறித்து தற்போது தெரியவில்லை, இருப்பினும் அவர் விரைவில் முழுவதுமாக குணமடைவார் என்று நம்புவதாக கூறினார்.
அவர் Nokia 3310 போனை விழுங்கியிருந்ததாக குறிப்பிட்டார்.

இந்த போன் மிகவும் பெரிது என்பதால் உடலில் உணவுகளை ஜீரணிக்க அனுமதிக்கவில்லை, அதுமட்டுமின்றி போனில் இருக்கும் பேட்டரி அமிலம் கசிந்து அவரது வயிற்றில் கசிந்து இருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது,

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!