மகளின் திருமணத்தை 40 கோடி செலவில் பிரம்மாண்டமாய் நடத்திய பில்கேட்ஸ்


உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவியை விவகாரத்து செய்த நிலையில், அவருடைய மகளுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் மகள் Jennifer Gates எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரை பந்தய வீரரான Nayel Nassar என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற Nayel Nassar டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் எகிப்து சார்பில் கலந்து கொண்டார்.

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், இவர்களின் திருமணம் கோலகலமாக அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள North Salem பண்ணையில் இந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் சுமார் 2 மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பில் 40,09,03,000 கோடி ரூபாய்) செலவில் நடந்துள்ளது.

இந்நிலையில், Jennifer Gates பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இந்த திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அதில், இந்த திருமணத்தில் சுமார் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டதாகவும், திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும், கொரோனா எதிர்மறை முடிவை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாக கூறினார்ர்.

ஏனெனில், இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் இது போன்ற நிகழ்வை திட்டமிடுவது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறிய அவர், தன்னுடைய பெற்றோரின் விவாகரத்தை குறிப்பிட்டு, எங்கள் குடும்பங்களில் மாற்றங்கள் இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பை காட்டி வருவதாகவும், நெருக்கமுடனே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

திருமணத்திற்கு வரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தடுப்பூசி கட்டாயம் என்பதை கூறினோம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முகக்கவசம் கொடுத்தோம்.
அமெரிக்காவை தொற்று நோய் உலுக்கி வருவதால், பாதுகாப்பு என்பது திருமணத்தில் மிக முக்கியமானதாக கருதினோம்.

இந்த திருமணம் விழா, ஒரு நீண்டகால குடும்ப நண்பரால் ஏற்பாடு செய்யப்பட்டது, இது மிகவும் சிறப்பான மற்றும் நெருக்கமான தருணம் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த திருமணம் இரண்டு சடங்குகளில் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட North Salem பண்ணை முழுவதும், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் திருமணத்தின் போது, நாட்டுப்புற இசைக்கச்சேரி, Jean Georges-ன் கேட்டரிங் என கலைகட்டியுள்ளது.

இந்த திருமணத்தில் பில்கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி Melinda ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். பில்கேட்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மனைவியை விவாகரத்து செய்தார்.
இந்த தம்பதிக்கு, ரோரி ஜான் என்ற மகனும் ஜெனிபர், போபே அடிலெ என இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் தற்போது ஜெனிபருக்கு திருமணம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!