எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டுகோள் – நிதியமைச்சின் பதில்

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என எரிசக்தி அமைச்சு விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளது.

விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புகிறோம்.

அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஸ்டத்தினை ஈடு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!