அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது பயண நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டாமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

பதுளை பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாகாணங்களுக்கியிலான பயண கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை எனவும், நாடு மற்றும் சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறுவதனை தவிர்த்து செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் நிலையில், பொது மக்கள் பொறுப்புடன் செயற்படுமாறும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன  கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!