பசளை தொடர்பாக எடுத்த முடிவுகளை மாற்ற அரசு தயங்கக்கூடாது! – ருவான் விஜேவர்தன

விவசாயிகளுக்கான பசளை தொடர்பாக எடுத்த முடிவுகளை மாற்றியமைக்க அரசாங்கம் தயங்கக்கூடாது, இதனால் ஏற்கனவே தோன்றியுள்ள பஞ்சத்தைத் தவிர்க்க முடியும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) இன்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள், வயலிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ள நிலையில் பஞ்சம் ஏற்கனவே உருவாகத் தொடங்கியுள்ளது.

எனவே பசளை நெருக்கடியைத் தீர்ப்பது அவசரமானது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள், தங்கள் நெல் வயல்களுக்கு நீர் இறைப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், அமைச்சர்கள் சென்று நிலைமையைப் பார்வையிடவேண்டும். அதேநேரம், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்குப் பற்றாக்குறை உள்ளது.

எனவே, விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்த முடிவுகளை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது என ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!