லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு! மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge ) கொலை மற்றும் ஏனைய வழக்குகளின் விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma), விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தின் முன் வழக்குகள் அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படும் விடயங்கள் குறித்து அரசாங்கம் கருத்து தெரிவிக்காது என்று தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார்(Keith Noyahr) மீது கடத்தல் மற்றும் தாக்குதல் மற்றும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் கட்டாய காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கம் பெரும்பாலும் மௌனமாகவே உள்ளது.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம்(Sanjay Rajaratnam), அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.

இந்த சம்பவங்கள் நீதிமன்றத்திற்கு முன்பாகவோ அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படுகின்றன. எனவே இதில் சம்பந்தப்படுவது நெறிமுறை அல்ல என்றும் அழகப்பெரும கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!