மறு அறிவித்தல் வரை ரயில்கள் செயற்படுத்தப்படமாட்டாது – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

மறு அறிவித்தல் வரை ரயில்கள் செயற்படுத்தப்பட மாட்டாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் நாளை முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கபடும் என ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஊழியர்களின் கோரிக்கை நேற்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை ரயில் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது என சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்

இதேவேளை, ரயில் சேவைகள் ஆரம்பிக்கும் பட்சத்தில் 128 முதல் 130 வரையான ரயில் சேவைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாகாணத்திற்குள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டியிலிருந்து புறப்படும் ரயில் குறைந்தளவு வேகத்தில் ரம்புக்கனை வரை செயற்படுவதுடன் தெமட்டகொட வரை தொடர்ச்சியாக இயக்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!