புலம்பெயர்வோரை கடுமையாக விமர்சித்த டக் போர்டு: வலுக்கும் கண்டனம்!

புலம்பெயர்வோரை கடுமையாக விமர்சித்த ஒன்ராறியோ பிரீமியர் மீது கண்டனங்கள் குவிகின்றன. புதிய மருத்துவமனை ஒன்றைக் கட்டுவதற்கான நிதியுதவி குறித்த அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்காக Tecumseh என்ற இடத்திற்கு வந்திருந்த ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, ஒன்ராறியோவின் பெரிய பிரச்சினையே பணியாட்கள் பற்றாக்குறைதான் என்றார்.

    
அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், ஒன்ராறியோவுக்கு யாராவது வரவிரும்பினால், அவர்கள் வேலை செய்யவேண்டும் என்றார் அவர்.

நீங்கள் ஒன்ராறியோவுக்கு வந்து அரசின் உதவியைப் பெற்றுக்கொண்டு அப்படியே சும்மா நேரம் செலவிடலாம் என்ரால், இங்கே அது நடக்காது. வேறு எங்காவது போங்கள். வேலை செய்ய விரும்பினால் மட்டும் இங்கே வாருங்கள். இங்கே போதுமான வேலை இருக்கிறது என்றார் அவர்.
பிரீமியரின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒரு பிரீமியர் என்பவர் ஒன்ராறியோவாசிகளை இணைப்பவராக இருக்கவேண்டும், பிரிப்பவராக அல்ல என்கிறார் லிபரல் கட்சித் தலைவரான Steven Del Duca. அத்துடன், அவரும், NDP கட்சித் தலைவரான Andrea Horwathம் பிரீமியர் Doug Ford தன் வார்த்தைகளுக்காக மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!