பிரித்தானிய எம்.பி கொல்லப்பட்டது ஏன்? – கொலையாளி சொன்ன தகவல்!

பிரித்தானியா எம்.பி கொலை செய்யப்பட்டதற்கு அவர் கத்தார் நாட்டு உடன் தொடர்பில் இருந்ததாக கூட இருக்கலாம் என்று கொலையாளி என்று சந்தேகப்படும் அலி ஹர்பி அலியின் மாமா கூறியுள்ளார். பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினரான Sir David Amess கடந்த வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இவரை Ali Harbi Ali என்று கூறப்படும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனே குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த செயலில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், அந்த நபர் குறித்து ஒவ்வொரு தகவலும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

கொலையாளி சோமாலியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், இவரின் தந்தை என்று கூறப்படும் Harbi Ali Kullane சோமாலியா பிரதமரின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகமான டேய்லி மெயிலுக்கு கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் மாமா Abdi Ali பிரத்யேகமாக இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், சோமாலிய அரசியலில் Sir David Amess தலையிட்டு, அங்கு தற்போதைய தலைவராக இருக்கும் Mohamed Abdullahi Farmaajo-வை ஆதரித்தற்காக அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நாங்கள் மிகவும் அரசியல் தெரிந்த குடும்பம். அரசியலைப் பற்றி அதிகம் பேசுவோம். குறிப்பாக சோமாலியாவில் என்ன நடக்கிறது மற்றும் கத்தார் ஈடுபாடு என்ன என்பது பற்றி விவாதிப்போம்.

இதைப் பற்றி Ali Harbi Ali-க்கு நன்கு தெரியும். எங்களுக்கு தென்கிழக்கு நாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லை,.அங்கு உறவினர்கள் என்று யாரும் எங்களுக்கு இல்லை. எங்களில் யாராவது ஒருவர் கூட, அங்கு ஒருநாள் சென்றிருக்கிறார்களா? என்று எனக்குத் தெரியவில்லை.

நாங்கள் ஒரு குடும்பமாக இதைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறோம். பொலிசார் என்னுடைய இந்த பேட்டியை பார்ப்பார்கள் என்பது தெரியும். நாங்களே என நடந்தது என்பது தெரியாமல் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளோம்.

சோமாலியாவில், கத்தாரின் ஈடுபாடு குறித்து உலகம் எங்கும் உள்ள சோமாலியர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

சோமாலியா நாட்டின் வணிகத்தின் மீது கத்தார் தலையிடுவதால், ஏராளமான சோமாளியர்கள் அந்த நாட்டின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக அவர் கூறினார்

எம்.பி Sir David Amess இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கத்தாருக்கு சென்றது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியா அரசியல்வாதிகளில், கத்தாரோடு மிகவும் நெருக்கமான எம்.பியாக அவர் இருந்தார்.

கடந்த காலத்தில் அவர் கத்தாருடனான தனது நெருங்கிய உறவுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தார். குறிப்பாக, BBC Radio Essex-ல் கடந்த வாரம் அவர் சமீபத்திய கத்தார் பயணம் பற்றி பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!