டெல்டா பிளஸ் இலங்கையை தாக்குமா?

கொரோனாவைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு சக்தி பிரிவின் தலைவரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு சக்தி பிரிவின் தலைவரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தமது ஆய்வுகூடத்தில் துரித ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கமைய டெல்டா பிளஸ் மாறுபாடு இதுவரை நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்க
ழகத்தின் நோயெதிர்ப்பு சக்தி பிரிவின்தலைவரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!