கணவர் இறந்த நிலையில் இளைஞனுக்காக பணத்தை வாரி இறைக்கும் அமெரிக்க தாயார்!

அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது விதவைப் பெண் 29 வயது காதலனுக்காக இந்த வருடம் மட்டும் சுமார் 30,000 டொலர் செலவு செய்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் Julie. 44 வயது மதிக்கத்தக்க இவருக்கு 18 மற்றும் 21 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய கணவர் இறந்த நிலையில், Julie சமூகவலைத்தள ஆப் ஆன Bumble app-ல் 29 வயது மதிக்கத்தக்க Zach-ஐ சந்தித்துள்ளார்.

இதையடுத்து இவர்கள் இருவர் தொடர்பான புகைப்படங்கை Julie தன்னுடைய டிக் டாக்(@Julie.Withthebooty TikTok, 65,000 பேர் பின்பற்றுகின்றனர்) பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
இதற்கு லைக்குகள் குவிந்து வந்த நிலையில், அவர்கள் சமீபத்தில் தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் இந்த ஆண்டு மட்டும் நாங்கள் Cabo, Florida, மற்றும் Niagara வீழ்ச்சி போன்ற இடங்களுக்கு சென்றோம்.

இதற்கு மட்டும் 30,000 டொலர்(இலங்கை மதிப்பில் 60,14,355 ரூபாய்) செலவழித்துள்ளேன். இன்னும் நாங்கள் இரண்டு இடங்களை குறிப்பிட்டு வைத்துள்ளோம், அதற்கு 10,000 டொலர்(இலங்கை மதிப்பில் 2004785 ரூபாய்) செலவாகும் என்று கூறியுள்ளார்.

நாங்கள் இருவரும் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். குறிப்பாக நான் ஒரு மாதத்திற்கு 30 முதல் 40,000 டொலர் சம்பாதிக்கிறேன். அவன் மாதத்திற்கு 15000 டொலர் சம்பாதிக்கிறான்.

ஆனால், நான் தான் அதிக பணம் செலுத்தி வருகிறேன். அவனுக்கு நிறைய கிப்ட்களை வாங்க விரும்புகிறேன். நான் அவனுக்கு விலையுயர்ந்த கிப்ட்டாக கொடுக்க விரும்புவது, விடுமுறைக்கு நாங்கள் வெளியில் செல்வது தான், நாங்கள் எப்போதும் எங்காவது வெளியில் சுற்றித் திரிவோம்.
இதுவரை நாங்கள் 10-க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டிருப்பதாகவும், அடுத்த படியாக Exuma Bahamas மற்றும் then Costa Rica-வுக்கு செல்லவுள்ளோம்.

அவர் என்னை காதலிக்கிறார். நன்றாக சமைப்பார், நான் ஒவ்வொரு இரவும் தூங்க செல்லும் முன் அவர் தலைமுடியை தூங்கும் வரை வருடிவிடுவார். அவரை அந்தளவிற்கு பிடிக்கும் என்று கூறினார்.

இப்படி இவர்கள் இருவருக்குள் தொடர்பு இருந்த போதிலும், Julie மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை என்பதை மட்டும் திட்டவட்டமாக கூறியிருப்பது தான் பெரும் ஆச்சரியம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!