எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் நிதி நெருக்கடி ஏற்படும்

எரிபொருளின் விலை அதிகரிக்கப்படாத பட்சத்தில், பாரிய நிதி நெருக்கடி ஏற்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை தமக்கு சாதமான முடிவு எட்டப்படவில்லை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையினால் இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் மேலும் நட்டமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார.

விலையினை அதிகரிக்காது எரிபொருளை விநியோகிப்பதன் ஊடாக, ஒரு லீட்டர் டீசல் விற்பனை ஊடாக 37 ரூபா நட்டம் ஏற்படுவதுடன் , ஒரு லீட்டர் பெற்றோல் விற்பனைமூலம் 23 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமும், அரசாங்கத்திடமும் அனுமதி கோர வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனிய வளம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஊடாக இந்திய நிறுவனத்திற்கு இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன், எதிர்க் கட்சியினரால் கூறப்படுவதைப் போன்று, நாட்டில் எரிபொருளுக்கான பற்றாக்குறை ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!