சஜித்துடன் சீனத் தூதுவர் பேச்சு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் வி.ஜென்ஹான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளளது. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

    
இதன்போது, இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்கும் நட்பு ரீதியான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கும் தற்போதைய கடன் நெருக்கடியை நிர்வகிப்பதற்கும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!