கருத்தடை செய்த ஆறு மாதத்துக்குள் மீண்டும் கர்ப்பமாகிய பெண்!

இந்தியாவில் கருத்தடை செய்த ஆறு மாதத்தில் இளம் பெண் மீண்டும் கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் சம்ரோலி கிராமத்தை சேர்ந்தவர் சுதா (28). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ஆரம்ப சுகாதார மையத்துக்கு சென்று கருத்தடை செய்துள்ளார். ஆனால் கருத்தடை செய்த ஆறு மாதத்துக்குள் சுதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

அப்போது தான் அவருக்கு சரியாக கருத்தடை செய்யப்படவில்லை என தெரிந்தது.இதையடுத்து சுதா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் இது குறித்து கருத்தடை ஆப்ரேஷன் செய்த சுகாதார மையத்துக்கு சென்று கேட்ட போது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சுதாவும், அவர் கணவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனிடையில் தலைமை மருத்துவ அதிகாரி முகேஷ்குமார் கூறுகையில், கருத்தடை செய்கையில் 2 சதவீதம் தோல்வியடைவது உண்மை தான். இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு 30000 நஷ்ட ஈடு வழங்கப்படும், அதை சுதாவுக்கும் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!