சீனாவிடம் மண்டியிட்டது அரசு!

இலங்கை அதிகாாிகளால் நிராகாிக்கப்பட்ட, சீனாவின் 96ஆயிரம் மெற்றிக்தொன் சேதன பசளையை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.இதற்காக மூன்றாம் தரப்பின் ஊடாக மற்றும் ஒரு பாிசோதனையை மேற்கொள்ள அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் நளிந்த ஜெயதிஸ்ஸ தொிவித்துள்ளாா்.

இலங்கையின் இரண்டு விவசாய அமைச்சா்களும், அமைச்சின் அதிகாாிகளும் திங்கட்கிழமை சீனத்துாதரகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் மூன்றாம் தரப்பின் பாிசோதனையுடன் இந்த பசளையை நாட்டுக்குள் அனுமதிக்க செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.

இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் இரண்டு ஆய்வக அறிக்கைகளையும் புறக்கணித்து மற்றொரு பரிசோதனையை நடத்த இலங்கை அதிகாரிகள் இணங்கியிருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனவே இந்த விடயம் தொடா்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் நளிந்த ஜெயதிஸ்ஸ கோாிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!