டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விவகாரம்: – குடும்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரே பெண் பரபரப்பு பேட்டி

டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விடயத்தில் புதிய திருப்பமாக அந்த குடும்பத்தில் கடைசியாக உயிரோடு இருக்கும் பெண் ஒருவர் தன் குடும்பம் குறித்து பேட்டி அளித்துள்ளார். புராரி பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கைப்பற்றப்பட்டதோடு, பொலிசாருக்கு கடிதங்கள் மற்றும் டைரிகள் சிக்கியது.

அதில், எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பொலிஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. இதில் நிர்மலா தேவி என்ற 77 வயது பெண்ணும் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் அவரின் மகள் சுஜாதா தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சுஜாதா மட்டுமே தற்போது அந்த குடும்பத்தில் உயிரோடு இருக்கும் பெண்ணாவார்.

அவர் கூறுகையில், என்னுடைய குடும்பம் தற்கொலை செய்ய கூடியது அல்ல. எங்கள் வீட்டில் யாருக்கும் அவ்வளவு மோசமான மூட நம்பிக்கை இல்லை. ஆனால் யாரோ இவர்களை கொலை செய்து இருக்கிறார்கள். பொலிஸ் அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மர்ம மரணத்தில் 6 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளனர். ஆனால் முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை. இதனிடையில், இந்த குடும்பத்தில் இருந்த புராரியின் தந்தை சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்துள்ளார். அவர் இவர்களின் கனவில் வந்து இப்படி தற்கொலை செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!