பிரித்தானியாவில் பேராபத்தில் 3 மில்லியன் வீடுகள்!

பிரித்தானியாவில் வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3,000,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றம் உண்மையானது மற்றும் அதனை கட்டுப்படுத்தாமல் விட்டால், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். துருவ பனிக்கட்டிகள் உருகினால், கடல் மட்டம் உயரும் மற்றும் கடலோர நகரங்கள் மற்றும் உள்நாட்டில் அமைந்துள்ள பல பகுதிகளில் நிரந்தர வெள்ளம் ஏற்படும்.

Gamma நிறுவனத்தால் (location intelligence provider) சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2050-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் உள்ள சுமார் மூன்று மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது.

Gamma ஒரு வரைபடத்தையும் சில படங்களையும் வெளியிட்டுள்ளது, இது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

காமா வழங்கிய தரவுகளின்படி, மூன்று மில்லியன் வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவது என்பது ஒவ்வொரு 10 வீடுகளிள் 1 வீடு நீரில் மூழ்கும் என்பதை காட்டுகிறது. சில நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இந்த விகிதம் மோசமாக உள்ளது.

காமாவின் தரவுகளின்படி, அடுத்த 29 ஆண்டுகளில் கிரேட் யார்மவுத்தில் (Great Yarmouth) உள்ள அனைத்து கட்டிடங்களில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
போர்ட்ஸ்மவுத்தில் (Portsmouth) ஐந்தில் ஒரு கட்டிடம் அதே நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

பிரித்தானியர்களின் கவலைக்கு வெள்ளம் மட்டும் காரணம் அல்ல. காலநிலை மாற்றம் வெப்பமான, வறண்ட கோடைகாலத்தை ஏற்படுத்தக்கூடும், இது கட்டுமானப் பொருட்களின் சீரற்ற விரிசல்களுக்கு வழிவகுக்கும், இது கட்டமைப்புகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 காலநிலை உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உலகத் தலைவர்கள் ஒன்று கூடி புவி வெப்பமயமாதலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கவுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!