அமெரிக்காவிற்கு படிக்க சென்ற இந்திய இளைஞர்: விமான நிலையத்தில் பிச்சையெடுத்த வாழ்ந்து வந்த துயரம்!

அமெரிக்கா விமானாநிலையம் ஒன்றில் ரகசியமாக வசித்துவந்த இந்திய நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் ஆதித்யா சிங். 37 வயதாகும் இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உயர் கல்விக்காக, அமெரிக்கா சென்றுள்ளார். படிப்பை முடிந்த இவர், அதன் பின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தன்னுடைய நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அங்கு வயது முதிந்த தந்தையை பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் திகதி இந்தியா திரும்புவதற்காக, சிகாகோவில் உள்ள O’Hare சர்வதேச விமானநிலையத்திற்கு திரும்பியுள்ளார்.

ஆனால், இந்தியாவில் கொரோனாவின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், விமானத்தில் ஏறாமல் விமானநிலையத்திலே தங்கியுள்ளார். அங்கிருக்கும் கண்காணிப்பு கமெரா மீது படாமல் பிச்சை எடுத்து வாழ்க்கையை கழித்து வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த விமானநிலைய அதிகாரிகளுக்கு இவர் மீது சந்தேகம் வர, அதிகாரிகள் விசாரித்த போது, விமான நிலைய மேற்பார்வையாளர் ஒருவரின் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அது, காணாமல் போனதாக புகார் கொடுத்த விமான நிலைய அதிகாரி ஒருவரின் அடையாள அட்டை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அவரை கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் திகதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது சட்ட விரோதமாக விமான நிலையத்திற்குள் வசித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, தீர்ப்பு கூறப்படும் வரை அவருக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஆதித்ய சிங் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்து, அவரை நீதிமன்றம் விடுவித்தது.
இருப்பினும், ஆதித்ய சிங், நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு முறை விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.இதில், ஆதித்ய சிங்கிற்கு தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!