
இது ஒரு ஆபத்தான மற்றும் உயிர்கொல்லி நோய் என்று பிரான்சின் குழந்தைகள் நல சபை எச்சரித்துள்ளது. இந்த அழற்சி நோய் ஏற்கனவே பிரான்சில் பரவியிருந்த நிலையில், தற்போது இது மீண்டும் மிக வேகமாக பரவத் துவங்கியுள்ளதாக பிரான்சின் குழந்தைகள் நல மருத்துவச் சபையின் தலைவர் Christèle Gras-Le Guen கூறியுள்ளார்.
இந்த நோய் தற்போது பிரான்சில் உள்ள 13 மாகாணங்களில் 11-க்கு பரவியுள்ளது. மீதமுள்ள ரெத்தோன் மற்றும் கோர்ஸ் மாகாணங்களிலும் இது பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் குறிப்பாக இரண்டு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் வெளியில் கொண்டு செல்லாமலும், பலர் முன்னிலையில் வைத்திருப்பதை தவிர்க்கும் படி எச்சரிக்கப்படுகிறது.
இந்த குளிர்காலத்தில் பெற்றோர்களுக்கு தடிமன் காய்ச்சல் வந்தால் கூட, அவர்கள் வீட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டும், கைகளை சுத்தம் செய்து கொண்டும், அதன் பின் குழந்தைகளை தொடுவதும் நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!