
இந்நிலையில் தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கனமழை காரணமாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதைப்போல் புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,மதுரை, விருதுநகர், சிவகங்கை ,செங்கல்பட்டு, விழுப்புரம் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் உள்ள அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!