குவைத்தில் 40 வயது காதலியை கழுத்தை நெரித்து கொன்ற 24 வயது இலங்கை இளைஞன்!

குவைத்தில் தன்னை விட 16 வயது அதிகமான காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இலங்கையர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட பெண்ணும் இலங்கையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 24 வயதான இளைஞனுக்கும், அவரின் 40 வயதான காதலிக்கும் இடையே தனிப்பட்ட தகராறு ஏற்பட்ட நிலையில் Fahaheel பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் வைத்து அப்பெண்ணை கழுத்தை நெரித்து இளைஞன் கொலை செய்திருக்கிறார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து இந்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பெரிய தகராறின் விளைவாக காதலியை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்பு கொண்டுள்ளார்.

காதலியை கொன்ற பின்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
உயிரிழந்த பெண்ணின் உடல் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் குறித்த இளைஞன் மீது திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!