பங்காளிகளுடன் அவசர சந்திப்பு!

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான 11 பங்காளி கட்சியின் தலைவர்களுக்கும் உறுப்பினர்கள்,ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான விசேட அவசர சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

யுகதனவி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மாகாணசபை தேர்தல்,பொதுஜன பெரமுனவிற்கும், ஆளும் கட்சியிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டன. பங்காளி கட்சியினர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் கவனம் செலுத்தினர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!