ராஜபக்சவினருக்கு கை கொடுத்த சீனா கன்னத்தில் அறைந்தது!

ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த அரசைக் கொண்டு வருவதற்காக சீனாவின் ஒத்துழைப்பை வழங்கியதுடன், அதற்கு பிரதி உபகாரமாக இலங்கையில் தமக்குத் தேவையான இடங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது சீனத் தூதரகம் மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்தமையானது சீன அரசு அல்லது சர்வதேசம், ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கறுப்புப் பட்டியல் சேர்ப்பதற்கு சமமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!