கரு தலைமையில் புதிய அரசியல் கூட்டணி?

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உருவாகவுள்ளது, இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

இதன்பிரகாரம் ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகள் வெளியேறக்கூடும் எனவும், கருவின் தலைமைத்துவத்துக்கு ரணிலும் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!