
க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
க்ளாஸ்கோவில் நாளை ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
COP 26 எனும் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு கடந்த ஜூலை மாதம் உத்தியோகபூர்வ அழைப்கு விடுக்கப்பட்டிருந்தது.
இரசாயன உரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் மற்றும் சேதன இயற்கை பசளைக்கு ஜனாதிபதி வழங்கிய முக்கியத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த விடயங்களில் நாட்டின் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் 2 ஆம் திகதிகளில் உலகத்தலைவர்களுக்கான உச்சிமாநாடு இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
குறித்த மாநாட்டில் 197 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் க்ளாஸ்கோ விஜயத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர ராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!