மிகப்பெரிய குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானிய தாய்: எடை எவ்வளவு தெரியுமா?


கிட்டத்தட்ட 15 பவுண்டு (6.7 கிலோ) எடைகொண்ட குழந்தையை பிரித்தானிய தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண் குழந்தை, பிரித்தானியாவில் பிறந்த 3-வது மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது. மேலும் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது.
    
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் John Radcliffe மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை Cherral Mitchell எனும் 31 வயது பெண்ணுக்கு இக்குழந்தை பிறந்தது.

மிட்சலுக்கு பிரசவம் பார்க்க இரண்டு மருத்துவர்கள் (Midwives) தேவைப்பட்டுள்ளனர்.
தற்போது இக்குழந்தைக்கு Alpha என பியரிடப்பட்டுள்ளது. மேலும் ‘Baby Hippo’ மற்றும் ‘Butter Bean’ என இரண்டு செல்லப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதுபோக குழந்தையின் தாய் ‘pumpkin baby’ என செல்லமாக அழைக்கிறார்.

38 வார கர்ப்பத்தில் பிறந்த இக்குழந்தை பிறக்கும்போது கிட்டத்தட்ட 15 பவுண்டு (14lb 15oz / 6.7 கிலோகிராம்) எடை இருந்தது.

முன்னதாக பிரித்தானியாவில் 1992-ல் பிறந்த Guy Carr எனும் குழந்தை (15lb 8oz) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து 2013-ல் George King எனும் குழந்தை (15lb 7oz) இரண்டாவது மிகப்பெரிய குழந்தையாக பிறந்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!