பிறந்தநாளன்று உயிரை மாய்த்துக்கொண்ட தேசிய தடகள வீரர்: அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஆத்துவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தியின். அவரது மகன் தமிழ்மணி. இவர் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் இவர் தேசிய வாலிபால் மற்றும் தடகள வீரர் ஆவார்.
    
இந்நிலையில், ஜீவானந்தம் வழக்கம்போல் பயிற்சிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு,நேற்று காலை வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு வரும் வழியில் அரும்பார்த்தபுரம் ரயில்வே ட்ராக் அருகே வந்து சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.

அப்போது விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது. திடீரென ஜீவானந்தம் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். இதனால் ரயில் அவர்மீது ஏறி இறங்கியதில் அவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அவரின் பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் ஜீவானந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!