எனது ஆட்சியில் ஒருபோதும் கஷ்டத்தில் தள்ள மாட்டேன்: மைத்திரி அறிவிப்பு

தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்க போவதில்லை என முன்னான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala sirisena) தெரிவித்துள்ளார்.

பக்கமுன நகரில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்க சென்றிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

விவசாயிகள் குறித்து தற்போதைய அரசாங்கத்திடம் நான் எந்தளவுக்கு பேசினாலும் அரசாங்கம் செவிமடுப்பதில்லை. கமத்தொழில் அமைச்சர் விவசாயத்தை அறிந்தவர் அல்ல. நான் பல முறை கமத்தொழில் அமைச்சருடன் விவசாயிகளில் பசளை பிரச்சினை பற்றி பேசினேன். எனினும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

சில ராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை காரணமாக என்னால், பொலன்நறுவைக்கு செல்ல முடியாதுள்ளது என நான் கூறினேன். அதனை அடிப்படையாக கொண்டே ராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அவற்றை நான் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதன் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகனவிடம் கேள்வி ஒன்றை எழுப்பிய விவசாயி ஒருவர், நீங்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மைத்திரிபால, நான் விவசாயிகளை கஷ்டத்தில் தள்ள மாட்டேன்.

சேதனப் பசளை மூலம் நெல்லை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு படிப்படியாக பழக்கப்படுத்துவேன் எனக் கூறியுள்ளார். தொடர்ந்துமு் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, உலகில் எந்த நாடும் நூற்றுக்கு நூறு வீதம் சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை.

அவுஸ்திரேலியா கூட சுமார் 50 வீதமே சேதனப் பசளையை பயன்படுத்தும் விவசாயத்தை செய்கிறது. நான் 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.

விவசாயிகள் விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் நான், விவசாயிகளை காப்பாற்றுவதற்காக பொலன்நறுவை நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முதல் முறையாக சவப் பெட்டிகளை கூட சுமந்திருக்கின்றேன் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!