மக்கள் கோவிட்டை மறந்து விட்டனர்: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மக்கள் கோவிட் பெருந்தொற்றை மறந்து விட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா (Naveen De Zoysa) நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடுகையில்,
நாட்டில் கடுமையான கோவிட் தொற்று நிலைமை காணப்பட்டது என்பதனை மக்கள் மறந்து விட்டனர்.

எங்களது ஆலோசனைகளை மக்கள் உதாசீனம் செய்கின்றனர். பொதுப் போக்குவரத்தில் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

கோவிட் ஒழிப்பு செயலணியினால் எடுக்கப்படும் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அமைச்சுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

பயணக்கட்டுப்பாடு காணப்பட்ட காலத்திலும் மக்கள் சுற்றுலாத்தளங்களில் கூடியிருந்தனர்.
நாட்டில் மீண்டும் ஓர் கோவிட் பிறழ்வு தாக்கி மீண்டும் ஓர் அலை ஏற்பட்டால் அது பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!