கர்ப்ப சிக்கலால் பறிபோன முதல் உயிர்: போலந்தில் வெடித்த போராட்டம்!

போலந்தில் கர்ப்பிணிப் பெண் செப்டிக் ஷாக் காரணமாக இறந்ததை அடுத்து, கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். போலந்தில் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்ததால் கர்ப்பிணி பெண் ஒருவர் செப்டிக் அதிர்ச்சியால் பரிதாபமாக உயிரிழந்தார்.
    
இசபெலா என அடையாளம் காணப்பட்ட பெண் செப்டம்பர் 22 அன்று தெற்கு போலந்தில் உள்ள Pszczyna மருத்துவமனையில் இறந்தார், ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வரை செய்தி வெளிவரவில்லை.

கருக்கலைப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, இசபெலாவின் வழக்கில், கர்ப்பத்தை கலைப்பதற்கு பதிலாக, மருத்துவர்கள் “காத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை” எடுத்துள்ளனர் என்று மருத்துவ முறைகேடுகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் ஜோலாண்டா புட்சோவ்ஸ்கா வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் எழுதினார்.

கருவில் அம்னோடிக் திரவம் இல்லாத போதிலும் கருவை கலைக்க மறுத்ததால், கரு இறக்கும் வரை மருத்துவர்கள் காத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தற்போது வழக்குரைஞர்கள் கட்டோவிஸில் விசாரணை நடத்தி வருவதாக வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு கருக்கலைப்பு சட்டத்தின் மீதான தடையை கடுமையாக்குவதற்கான தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர், கர்ப்ப சிக்கல்களால் ஏற்படும் முதல் மரணம் இதுவாகும்.

இந்த விடயம் வெட்டவெளிச்சமானதை அடுத்து, அப்பெண்ணுக்கு போலந்தில் உள்ள வார்சாவில் உள்ள அரசியலமைப்பு தீர்ப்பாயம் முன்பு பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி சென்ற திங்கள்கிழமையன்று அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பெண்கள் வேலைநிறுத்தம் என்ற பெயரில் ஒரு குழு போலந்து தலைநகர் வார்சா மற்றும் கிராகோவில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது.

பிறவி முரண்பாடுகளுக்காக கருக்கலைப்பு செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்த புதுப்பிக்கப்பட்ட சட்டத்திற்கு எதிராக குழு எதிர்ப்பைத் தொடங்கியுள்ளது.
போலந்தின் கருக்கலைப்பு சட்டம் 1993-ல் நடைமுறைக்கு வந்தது அதில் கற்பழிப்பு, பாலுறவு, குழந்தையின் உடல் குறைபாடுகள் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து போன்ற வழக்குகளைத் தவிர கருக்கலைப்புக்கு தடை விதித்தது.

எவ்வாறாயினும், அக்டோபர் 22 அன்று, அரசியலமைப்பு தீர்ப்பாயம் தற்போதுள்ள சட்டத்தை திருத்தியது. மனித உரிமைகள் கண்காணிப்பு (HRW) படி, கடுமையான மற்றும் மீளமுடியாத கரு குறைபாடு அல்லது கருவின் உயிருக்கு அச்சுறுத்தலான குணப்படுத்த முடியாத நோய் ஆகியவற்றின் அடிப்படையில் கருக்கலைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது.

இது ஐரோப்பாவில் உள்ள கடுமையான சட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில் மருத்துவ வல்லுநர்கள் உடல்நலம், பின்விளைவுகளுக்கு பயந்து, தாய்க்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட கர்ப்பத்தை கலைக்க மறுக்கிறார்கள் என்று HRW கூறிகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!