எவருடைய ஆலோசனையும் எனக்கு அவசியம் இல்லை: சஜித் திட்டவட்டம்

தமக்கும், கா்தினால் மல்கம் ரஞ்சித்துக்கும் இடையில் தவறானக்கருத்துக்களை உருவாக்கி, தமது அரசியல் கௌரவத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளாா்.

இதன்மூலம் கத்தோலிக்க மக்கள் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தகா்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனினும் இது தொடா்பில் இன்று தாம், கா்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து விளக்கமளித்ததாக அவா் இன்று செய்தியாளா்களிடம் தொிவித்தாா்.

கத்தோலிக்க மக்கள் விடயத்தில், தமது அரசியல் நிலைப்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட தவறானப் பிரசாரம் குறித்தும் தாம், கா்தினாலிடம் விளக்கமளித்ததாக அவா் குறிப்பிட்டாா்.
இதேவேளை தாம், குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவரின் ஆலோசனையின்படி நடந்துக்கொள்வதாக குற்றச்சாட்டு குறித்தும் சஜித் பிரேமதாச மறுப்பை வெளியிட்டாா்.

எதிா்க்கட்சி தலைவராக செயற்படுவதற்கு எவருடைய ஆலோசனையும் அவசியம் இல்லை என்று அவா் குறிப்பிட்டாா்

இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டவர்கள் தொடா்பில் உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டாா்.
இந்த விடயம் தொடா்பில் கா்தினால் உட்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!