தேவையற்ற பயணங்களை தவிருங்கள்!

இவ்வார இறுதியில் நீண்ட விடுமுறை இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஈடுபடுவது மீண்டும் ஒரு கொரோனா அலைக்கு வழிவகுக்கும் எனவும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இன்று ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

“தீபாவளி விடுமுறை தினம் என்பதால் அடுத்து வரும் வார இறுதி நாட்களில் உல்லாசப் பயணங்கள் மற்றும் ஏனைய பயணங்களில் ஈடுபடுவதற்குச் சிலர் ஏற்கனவே திட்டமிட்டிருக்கின்றனர்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களினால் வைரஸ் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. இது போன்ற தேவையற்ற அபாயங்களை மக்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

இவ்வார இறுதி நாட்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம். எவரேனும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகப் பயணத்தில் ஈடுபடுபவர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியம்” – என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!