பசிலின் பதவி செல்லுபடியற்றது – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

பசில் ராஜபக்சவை (Basil Rajapaksa) நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை செல்லுபடியற்றது என உத்தரவிடக் கோரி உலப்பனே சுமங்கள தேரர் (Ulapane Sumangala thero) உட்பட மூன்று பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இரட்டை குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்தமையை அடிப்படையாக கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுமங்கள தேரர் நேற்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!